மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
புதிதாக கட்டப்பட்ட அதி நவீன ஒருங்கிணைந்த நுரையீரல் ஆராய்ச்சிக் கூடம், பொது சுகாதார ஆய்வகம், சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம், ஆம்புலன்ஸ் என 9 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டிலான சேவைகள் இன்று பயன்பாட்டிற்கு வந்தன.
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ சட்ட விதிகளை மீறி மருத்துவர் அல்லாத யூடியூபர் இர்ஃபான் குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த விவகாரத்தில், அவர் மன்னிப்புக் கேட்டாலும் விட முடியாது என தெரிவித்தார்.