சென்னை,
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தையடுத்து, கார்த்தியுடன் கைதி 2, சூர்யாவுடன் ரோலக்ஸ் மற்றும் இரும்பு கை மாயாவி என 3 படங்களை லோகேஷ் கைவசம் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், இரும்பு கை மாயாவி படத்தை சூர்யாவுக்கு பதில் பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து லோகேஷ் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக இயக்கப் போவதாகவும், புஷ்பா, புஷ்பா 2 படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.