மும்பை,
கடந்த 2019ம் ஆண்டு ரன்வீர் சிங்,ஆலியா பட் நடிப்பில் வெளியான படம் ஹல்லி பாய். சோயா அக்தர் இயக்கிய இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. தற்போது இப்படம் வெளியாகி 6 வருடங்களை நெருங்கும்நிலையில், இதன் 2ம் பாகம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, கதையை முற்றிலும் மாற்றி புதிய நடிகர்கள் மற்றும் இயக்குனர் இதில் பணிபுரிய உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இப்படத்தை அர்ஜுன் வரைன் இயக்க உள்ளதாகவும் விக்கி கவுசல் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால், இது பற்றிய எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.