இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் கணவர் வீட்டார்: புதுமணப் பெண் நெல்லை காவல் ஆணையரிடம் புகார்

2 days ago 4

நெல்லை: இருட்​டுக்​கடையை வரதட்​சணை​யாக கணவர் வீட்​டார் கேட்​கின்​றனர் என்று புது​மணப் பெண் போலீ​ஸில் புகார் தெரி​வித்​துள்​ளார். நெல்லை டவுனில் ‘இருட்​டுக்​கடை’ என்ற பெயரில் உலகப் பிரசித்​திபெற்ற அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்​ப​தி​யின் மகள் ஸ்ரீகனிஷ்​கா. இவர், வரதட்​சணை கேட்டு கணவர் வீட்​டார் கொலை மிரட்​டல் விடுப்​ப​தாக நெல்லை காவல் ஆணை​யரிடம் புகார் மனு அளித்​திருந்​தார்.

இதுகுறித்து கவிதா ஹரிசிங் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: எனது மகள் ஸ்ரீகனிஷ்கா​வுக்​கும், கோவையைச் சேர்ந்த பல்​ராம்​சிங் என்​பவருக்​கும் பிப்​.2-ம் தேதி திரு​மணம் நடை​பெற்​றது. திரு​மண​மாகி ஒரு மாதம்​கூட ஆகாத நிலை​யில், என் மகளை வரதட்​சணை கேட்டு அவரது கணவர் கொடுமைப்​படுத்தி இருக்​கிறார். அவரது குடும்​பத்​தினரும் என் மகளிடம் கூடு​தல் வரதட்​சணை வேண்​டும் என்​றும், ரூ.1.5 கோடி மதிப்​புள்ள கார் வேண்​டுமென்​றும் கேட்டு துன்​புறுத்​தி​யுள்​ளனர். அவர்​கள் கேட்ட காருக்கு நாங்​களும் புக் செய்து வைத்​திருந்​தோம்.

Read Entire Article