இருக்கும் போதே விருப்ப மனுவா? - செல்வப்பெருந்தகைக்கு எதிராக கொடி பிடிக்கும் காங். மாவட்டத் தலைவர்கள்

2 weeks ago 2

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்ற செல்வப்பெருந்தகை பிப்ரவரியில் ஓராண்டை நிறைவு செய்யும் நிலையில், மாவட்ட தலைவர்கள் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸில் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை பெற விருப்பம் உள்ளவர்கள், இணைய வழியில் விருப்ப மனுக்களை வழங்கலாம் என்று செல்வப்​பெருந்தகை அண்மையில் அறிவித்​தார். இதற்குத்தான் மாவட்ட தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்​துள்ளது.

ஈவிகேஎஸ் மற்றும் மன்மோகன் சிங் படத்திறப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. முதல்வர் கலந்து கொண்ட இந்த நிகழ்வை சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்டத் தலைவர்​களுடனான இணைய வழி கூட்டத்தைக் கூட்டி இருந்தார் செல்வப்​பெருந்தகை. ஆனால், அவர் மீதான அதிருப்​தியின் காரணமாக இந்தக் கூட்டத்தை சென்னை மாவட்ட தலைவர்கள் ஒட்டுமொத்​த​மாகப் புறக்​கணித்து எதிர்ப்பைக் காட்டினர்.

Read Entire Article