இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து திருச்சி பள்ளி வகுப்பு அறையில் பெண்ணுடன் வாலிபர் உல்லாசம்: போதையில் மட்டை, தேர்வெழுத வந்த மாணவர்கள் ஓட்டம், வீடியோ வைரலால் பரபரப்பு

18 hours ago 3

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஒரு மேல்நிலைப்பள்ளியில், அப்பகுதி வாலிபர்கள் சிலர் இரவு நேரங்களில் சுவர் ஏறிக்குதித்து உள்ளே சென்று மது அருந்துவது, பெண்களை அழைத்து சென்று உல்லாசத்தில் ஈடுபடுவது என தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  இதுகுறித்து தெரியவந்த பள்ளி நிர்வாகத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அத்துமீறி பள்ளி வளாகத்துக்குள் பிரவேசிக்கும் நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பள்ளிக்குள், ஒரு பெண்ணுடன் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற வாலிபர் ஒருவர், தற்போது தேர்வு நடந்து வரும் பூட்டப்பட்டிருந்த 10ம் வகுப்பு அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அங்கு வகுப்பறையின் மின்விசிறி மற்றும் லைட்டுகளை போதையில் உடைத்துள்ளார். பின்னர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அங்கேயே போதையில், அந்த பெண்ணுடன் தூங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வகுப்பறைக்குள் ஒரு ஜோடி படுத்து தூங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து, அலறியடித்தபடி சென்று, பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். உடன் அங்கு வந்த பள்ளி ஆசிரியர்கள் இருவரையும் எழுப்பிவிட்டு, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு மித மிஞ்சிய கஞ்சா போதையில் இருக்கும் அந்த வாலிபர் அலட்சியமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.

வீடியோவில், பள்ளி ஆசிரியர்கள் அந்த வாலிபரிடம் பள்ளி வகுப்பறையில் நுழைந்து இப்படி நடந்துகொள்வது சரியா?. இது பள்ளிக்கூடமா என்ன? எனக்கேட்கின்றனர். அதற்கு அந்த வாலிபர், நேற்று இரவு வெகு நேரமாகிவிட்டதால், பள்ளிக்குள் படுத்திருந்துவிட்டு செல்லலாம் என நினைத்தேன். நான் செய்தது தவறுதான். இப்ப என்ன செய்ய வேண்டும் என போதையில் பிதற்றுகிறார். அதற்கு ஆசிரியர்கள், நாங்கள் என்ன லாட்ஜா கட்டிவிட்டுள்ளோம் என கேட்கின்றனர்.

ஆனால் இதையெல்லாம் பொருட்டாக கருதாமல் அந்த வாலிபர் அலட்சியமாக, அந்த பெண்ணை சுவரில் ஏற்றி அமர வைத்துள்ளபடி ஏதேதோ உளறுகிறார். இவ்வாறாக அந்த வீடியோ நகர்கிறது. இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள், கல்வி கூடங்களை கலவிக்கூடங்களாக மாற்றும் இதுபோன்ற சமூக விரோதிகளுக்கு சரியான பாடம் புகட்டும் வகையில், கடுமையான தண்டனைகள் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து திருச்சி பள்ளி வகுப்பு அறையில் பெண்ணுடன் வாலிபர் உல்லாசம்: போதையில் மட்டை, தேர்வெழுத வந்த மாணவர்கள் ஓட்டம், வீடியோ வைரலால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article