இரண்டாம் கட்ட அறுபடை வீடு ஆன்மிக பயணம்: பழனியில் இன்று தொடங்குகிறது

4 months ago 20

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்திற்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்த ஆண்டிற்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் முதற்கட்டப் பயணம் 200 முதியோர்களுடன் கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இரண்டாம் கட்ட பயணமானது திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 முதியோர் பயன் பெறும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பழனி முருகன் கோவிலில் இருந்து தொடங்குகிறது.

குழுவினர் பழனியில் புறப்பட்டு திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி ஆகிய கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்கின்றனர்.

இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் முதியோர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், தேங்காய் எண்ணெய், போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன.

மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர். இந்த தகவல் இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article