சென்னை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ, பொருளாளர் கோவை உமர், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஜெ.நொலஸ்கோ, துணைப் பொதுச் செயலாளர்கள் தாம்பரம் யாகூப், மைதீன் சேட்கான், தஞ்சை பாதுஷா உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாகநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், சிறுபான்மை முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் வரும் ஜூலை 6ம் தேதி நடைபெறும் தென் மண்டல பேரணி மற்றும் மாநாட்டில் ஆயிரக்கணக்கில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து புள்ளி விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். வக்பு போராட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட வேண்டும் என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் ஜூலை 6ம்தேதி மண்டல பேரணி, மாநாடு: ம.ம.க. செயற்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.