சென்னை: நிலுவை வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரது கருத்துகளையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “அதிமுகவில் நிலவும் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் எதிராக சிலர் நடந்து கொண்டது குறித்தும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2017 முதல் 2022 வரை பல்வேறு புகார் மனுக்களை அனுப்பியுள்ளேன்.