
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவ மதத்தினரால் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. புனித வெள்ளி கிறிஸ்தவர்களுக்கு துக்க நாளாகும். மக்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தியாகத்தை நினைவு கூறும் நாள்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான புனித வெள்ளி தினம் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.தமிழகத்தில் உள்ள பல தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறும் வகையில் சிலுவைப்பாடு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், புனித வெள்ளி தினத்தில் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை போற்றுவோம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அன்பையும், இரக்க குணத்தையும் போதித்த இயேசுகிறிஸ்து,உலகின் பாவத்தை போக்க சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த புனித வெள்ளி நாளான இன்று, இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும் பேரன்பையும் நினைவு கூர்ந்து போற்றுகிறேன்' என தெரிவித்துள்ளார்.