*தேங்காய் எண்ணெய் உடன் கறிவேப்பிலையை நீர் விடாமல் பொடி செய்து கொள்ளவும். தலைக்கு தடவினால் முடி கருப்பாகவும், இளநரை தடுக்கப்படுகிறது. பொடுகு சேராது. தலைமுடி நன்றாக வளரும்.
*நல்லெண்ணெயில் வாய் கொப்பளித்தால் ஆரோக்கியம் பெறும். வாரந்தோறும் நல்லெண்ணெய் உடலுக்கு தேய்த்து குளித்தால் தோல் ஆரோக்கியம் பெறும்.
* கடலை மாவு, செம்பருத்தி, வெள்ளரிக்காய், ஆரஞ்சுத் தோல் சேர்த்து ஃபேஸ் பேக் உபயோகித்தால் முகம் எண்ணெய் பிசுக்கின்றி மின்னும்.
*நல்லெண்ணெய் தேவையான அளவு எடுத்து சீரகம், மிளகுப் பொடி ¼ ஸ்பூன் சேர்த்து காய்ச்ச வேண்டும். இதை தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு வராது.
*வெள்ளைப் பூண்டு, வெற்றிலைச் சேர்த்து அரைத்து தேமல் மேல் தேய்த்தால் தேமல் மறையும்.
*பாலாடையுடன் மஞ்சள் தேய்ந்துத் தடவ முகம் பளபளக்கும்.
* முட்டையின் வெள்ளைக்கருவை கூந்தலில் தேய்த்து நன்கு காய்ந்து வரட்டி போல மாறியதும் குளித்தால் முடி உறுதியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
* வீட்டில் திருமணம், மற்றும் சுப காரியங்களுக்குப் பயன்படுத்திய பன்னீர் ரோஜா மாலைகளை தூக்கி வீசாமல் அதனை அப்படியே உதிர்த்து நிழலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு முகத்துக்கான பேக் போட்டுக் கொள்ளலாம். முகம் பிரகாசிக்கும்.
*அதே பன்னீர் ரோஜா பவுடரை பாசிப் பயிறு மாவுடன் சேர்த்து குளியல் பொடியாகவும் பயன்படுத்தலாம். உடல் நாற்றம் நீங்கி வனப்பாக மாறும்.
*உருளைக் கிழங்கை வட்டமாக வெட்டி கண்களில் வைத்துக்கொள்ள உஷ்ணம் நீங்கி, கருவளையம் குறைந்து கண்கள் பளிச்சிடும்.
* உருளைக் கிழங்குடன் வெள்ளரி அரைத்து முகத்தில் பூசினாலும் பளிச்சென்ற முகம் பெறலாம்.
– விஜயலட்சுமி.
The post இயற்கை அழகு! appeared first on Dinakaran.