இயக்குனர் ஹரியுடன் மீண்டும் இணையும் பிரசாந்த்

16 hours ago 1

சென்னை,

கோலிவுட்டில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பிரசாந்த். பின்னர் சில காரணங்களால் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இவ்வாறு பல வருடமாக சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் பிரசாந்த், சமீபத்தில் கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'அந்தகன்'. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தின் ரீமேக்காக 'அந்தகன்' திரைப்படம் உருவானது. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. விஜய்யின் கோட் படத்திலும் அவரது நடிப்பும் நடனமும் பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிரசாந்த் நடிக்கும் அடுத்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பிரசாந்தின் 55-வது படமாகும். இயக்குநர் ஹரியின் முதல் படமான 'தமிழ்' திரைப்படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

இந்தப் படத்திற்கான அறிவிப்பை பிரசாந்த் பிறந்தநாளான நாளை படக்குழு வெளியிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் கதாநாயகியாக கயாது லோஹர், பூஜா ஹெக்டே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.இந்த ஆண்டில் பிரசாந்த் இரு படங்கள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அதற்கான அறிவிப்புகள் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article