மும்பை அணியுடன் இணைந்த பும்ரா... ஆர்.சி.பி-க்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா..?

1 day ago 2

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான மும்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த ஜனவரி 3-ந்தேதி சிட்னியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டின்போது முதுகில் காயமடைந்தார்.

காயம் தீவிரமாக இருந்ததால் அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் தவற விட்டார். இதையடுத்து அவர் பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமில் காயத்திலிருந்து மீண்டு பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.

இவர் இல்லாததால் நடப்பு சீசனில் மும்பை அணி 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. இதனால் இவரது வருகையை மும்பை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா தற்போது மும்பை அணியுடன் இனைந்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மும்பை நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஆனால், ஏப்ரல் 7-ம் தேதி பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா? இல்லாயா? என்பது உறுதியாக தெரியவில்லை. பெங்களூருக்கு எதிரான பும்ரா ஆடவில்லை என்றால் அதற்கடுத்த போட்டிகளில் இருந்து அவர் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என தெரிகிறது. 



Read Entire Article