இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை பற்றிய ஆவணப்படத்தின் 2வது எபிசோட் வெளியீடு

4 weeks ago 4

சென்னை,

கமல்ஹாசனின் ஆரம்பகாலத்தில் கே.பாலச்சந்தர் தான் அவரது குருவாக இருந்தார். அவரது வரிசையில் கமலின் கேரியரில் மிகப் பெரிய மாற்றம் கொடுத்தவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களை இயக்கியுள்ளார். ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மும்பை எக்ஸ்பிரஸ் ஆகியவை சிங்கீதம் இயக்கத்தில் கமல் நடித்த படங்களாகும்.

கமலின் 'பேசும் படம்' உட்பட பல பேசப்பட்ட படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். இவரை கௌரவிக்கும் பொருட்டு கமலின் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் 'அபூர்வ சிங்கீதம்' என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் விழா எடுத்து கௌரவித்தார் கமல்.

நடிகர் கமல்ஹாசன் தற்பொழுது இயக்குனர் இமயமான சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை கவுரவிக்கும் வகையில் அவர் இந்திய சினிமாவிற்காக செய்த பங்களிப்பை போற்றும் வகையில் அவரை பற்றி ஆவணப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

சிங்கிதம் ஸ்ரீனிவாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய அபூர்வ சகோதரர்கள் மற்றும் மாயா பசார் ஆகிய திரைப்படங்கள் சினிமா உலகின் வரலாற்றில் இடம் பெற்ற திரைப்படங்களாகும்.

இந்நிலையில் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் பற்றிய அபூர்வ சிங்கீதம் ஆவணப்படத்தின் 2வது எபிசோடை ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஆவணப்படத்தின் 2வது எபிசோடு ராஜ்கமல் பிலிம்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.

Read Entire Article