சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அவர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு டீசர் . கடந்த பொங்கலன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தனது பள்ளிகால நினைவுகளை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
'நான் பார்த்த படங்களை பள்ளியில் என் நண்பர்கள் முன்னிலையில் நடித்து காட்டுவேன். இது என் ஆசிரியர்களுக்கு தெரிய வர பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் நாடக போட்டியில் நடிக்க வைத்தனர். அப்படி நடிக்கும் போது எனக்கு சிறந்த நடிப்பிற்காக விருது கிடைத்தது. அது இப்போது எனக்கு மிகவும் உதவுகிறது' என்றார்.