இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்; சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது

2 months ago 12

சிவகங்கை,

சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிட்கோ அருகே சிவகங்கையில் தொண்டி சாலையை சேர்ந்த அருண்பாண்டி, சாக்ளா வீதியை சேர்ந்த நிதிஷ்வரன், சோழபுரத்தை சேர்ந்த அய்யப்பன் மற்றும் 2 சிறுவர்கள் என 5 பேர் மது குடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இவர்களை போலீசார் பிடித்து விசாரிக்க முயன்றனர். அப்போது அவர்கள் மதுபாட்டிலை உடைத்து இன்ஸ்பெக்டர் அன்னராஜாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை விரட்டிச்சென்ற போலீசார் 5 பேரையும் பிடித்து கைது செய்தனர்.

போலீசிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது தவறி கீழே விழுந்ததில் அருண்பாண்டி, நிதிஷ்வரன் ஆகியோருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 2 பேரும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Read Entire Article