இன்ஸ்டாகிராம் காதல்: வீடியோ காலில் அரைகுறை ஆடையுடன் பேச்சு.. வாலிபருடன் லாட்ஜில் தங்கிய 8-ம் வகுப்பு மாணவி

5 hours ago 4


ஆண்ட்ராய்டு செல்போனின் பயன் இந்த நவீன காலத்தில் இன்றியமையாதது என்றாலும், அதை தவறான பாதையில் பயன்படுத்துவதால், நாளுக்கு நாள் குற்ற சம்பவத்தில் இருந்து கலாச்சார சீரழிவு வரை நடக்கின்றது. குறிப்பாக இன்றைய கால இளம் பெண்களில் இருந்து குடும்பப் பெண்கள் வரை வாழ்க்கையை தொலைக்கின்றனர்

இளம் வயதில் ஏற்படும் ஈர்ப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இருப்பினும் இன்ஸ்டாகிராம் மூலமாக இளைஞர்கள் வீசும் காதல் மற்றும் காம வலையில் பள்ளி மாணவிகள் பலர் சிக்கி தவிப்பது தொடர் கதையாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த 14 வயதே ஆன 8-ம் வகுப்பு மாணவி தனது தாத்தா பாட்டியின் அரவணைப்பில் படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருந்து வந்துள்ளார். அதில் தெரிந்த நண்பர்கள் மற்றும் தெரியாத நபர்களுடன் சாட்டிங் செய்து நீண்ட நேரம் உரையாடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த 19 வயது வாலிபரான சூர்யா என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலமாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இதன் பின்னர் அடிக்கடி இரவு நேரங்களில் நீண்ட நேரம் மாணவி, வாலிபர் சூர்யாவுடன் மணிக்கணக்கில் இன்ஸ்டாகிராமில் பேசுவதை வழக்கமாகவே வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதுபோன்ற நேரங்களில் வாலிபர் சூர்யா மாணவியுடன் ஆபாசமாக பேசி வந்துள்ளார். அப்போது இருவரும் வீடியோ காலிலும் அரைகுறை ஆடையுடன் பேசி வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இப்படி மாணவியை வீடியோ காலில் பார்த்து ரசித்த சூர்யாவுக்கு நேரில் ஆசை ஏற்பட்டது. அவரைப் பார்ப்பதற்கு இதைத்தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலமாக சூர்யா ஆவடிக்கு புறப்பட்டார்.

நேற்று முன் தினம் இரவில் ஆவடியை வந்தடைந்த சூர்யா மாணவியின் வீட்டுக்குச் சென்று வா வெளியில் செல்லலாம் என அழைத்துள்ளார். அப்போது மாணவியின் பாட்டி தடுத்து நிறுத்தி இருக்கிறார். அவரை கீழே தள்ளி விட்டுவிட்டு மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். இதனால் பதறி போன பாட்டி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார்.

இது பற்றி ஆவடிபோலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆவடி போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது மாணவி தாம்பரத்தில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்கி இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவி தங்கி இருந்த அறையில் அதிரடியாக புகுந்தனர். அப்போது வாலிபர் சூர்யாவுடன் மாணவி ஒன்றாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பத்திரமாக மாணவியை மீட்டனர். பின்னர் பொள்ளாச்சி வாலிபர் சூர்யா போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மாணவியிடம் வாலிபர் சூர்யா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சூர்யா மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "இன்றைய பள்ளி மாணவிகள் பலர் இன்ஸ்டாகிராமில் மூழ்கி முகம் தெரியாத ஆட்களோடு பழகி தங்களை தொலைத்து விடுகிறார்கள். எனவே பெற்றோர்கள் தங்களது மகன்கள், மகள்கள் இன்ஸ்டாகிராமில் யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதை கண்காணித்து அவர்களை பத்திரப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களது எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read Entire Article