இன்றைய ராசிபலன் - 15.10.2024

3 months ago 19

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ்: குரோதி வருடம், புரட்டாசி மாதம் 29ம் தேதி செவ்வாய் கிழமை

ஆங்கிலம்: அக்டோபர் 15ம் தேதி 2024

நட்சத்திரம்: இன்று இரவு 8.52 வரை பூரட்டாதி பின்பு உத்திரட்டாதி

திதி: இன்று அதிகாலை 12.37 வரை துவாதசி, இரவு 10.20 வரை திரயோதசி, பின்பு சதுர்த்தசி

யோகம்: மரண, அமிர்த யோகம்

நல்ல நேரம்: காலை 7.45 to 8.45

நல்ல நேரம்: மாலை 4.45 to 5.45

ராகு காலம்: மாலை 3.00 to 4.30

எமகண்டம்: காலை 9.00 to 10.30

குளிகை: மாலை 12.00 to 1.30

கௌரி நல்ல நேரம்: காலை 10.45 to 11.45

கௌரி நல்ல நேரம்: மாலை 7.30 to 8.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டம்: பூசம், ஆயில்யம்

ராசிபலன்:

மேஷம்

நண்பர்களிடையே ஏற்ப்டட கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை இன்று முடிவுக்கு வரும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிகமான ஆர்டர்கள் பெற்று இன்சன்டிவ் பெறுவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

எதிர்பார்த்த ஒரு முக்கிய செய்தி தங்களுக்கு மனமகிழ்ச்சியைத் தரும். முகம் புதுப்பொலிவு கூடும். கணவன் மனைவியிடையே ஏற்பட்ட மோதல்கள் நீங்கி அமைதி நிலவும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். அரசியலில் நாட்டம் கூடும். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். நண்பர்கள் கைக் கொடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மிதுனம்

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கேட்ட இடத்தில் இடமாற்றம் கிடைக்கும். தம்பதிகளிடையே நல்ல ஒரு புரிதல் ஏற்படும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு ஏற்பட்ட அடிவயிறு பிரச்சினை நீங்கும். பங்கு சந்தைகளில் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கடகம்

புனர்பூசம், பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

சிம்மம்

இளம் பெண்களுக்கு நல்ல வரண் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை கூடும். அதனை திட்டமிட்டு சரிவர செய்து தங்கள் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவர். சகோதர வகையில் உதவிகள் உண்டு. குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கன்னி

காதல் கசக்கும். பெற்றோர்களின் உடல் நலத்தை கவனிப்பது நல்லது. மருத்துவ செலவிற்கு இடமுண்டு. மருத்துவர்கள் செழிப்பர். தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். குலதெய்வ பிரார்த்தனையை தள்ளி போடுவீர்கள். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். பிடித்த நபரை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக விசயமாக வெளியூர் பயணம் உண்டு. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. நண்பர்கள் தக்க சமயத்தில் கைக்கொடுப்பர். உடல் நலம் தேறும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பெரியர்வர்களின் ஆசி கிட்டும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்

விருச்சிகம்

அக்கம் பக்கம் வீட்டாரிடம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தாங்கள் நினைத்தவாறே நல்ல கடை வாடகைக்கு கிடைக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். காதலர்கள் தங்கள் பொறுப்பினை உணர்ந்து தங்கள் பெற்றோர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

தனுசு

கடன் பிரச்சினையிலிருந்து சமாளிக்க அதில் ஒரு தொகை கொடுத்து நற்பெயர் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். குடும்பத்தில் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். வேலைக்கு செல்பவர்கள் தாங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மகரம்

நீங்கள் கேட்ட இடத்திலிருந்து ஒரு தொகை கடனாக பெறுவீர்கள். தங்கள் அத்தியாவசிய தேவைகளை முடிப்பீர்கள். இன்று தங்கள் வங்கியில் உள்ள சிலப்பணிகளை முடித்துவிடுவீர்கள். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். அரசியலில் நாட்டம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

வேலைகள் தள்ளிப் போகும். காதல் கண் சிமிட்டும். உறவினர்கள் வருகை உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் செய்யக்கூடிய வேலையில் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பெற்றோர்களின் உடல் நலம் தேறும். மருத்துவ செலவு குறையும். பார்ட்னரிடம் பொறுமை அவசியம். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு தங்கள் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். வெளிநாட்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும். முகம் வசீகரம் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்



 


Read Entire Article