இன்றைய ராசிபலன் - 11.06.2025

1 day ago 4

இன்றைய பஞ்சாங்கம்:-

ஜூன் 11

கிழமை : புதன் கிழமை

தமிழ் வருடம் : விசுவாவசு

தமிழ் மாதம் : வைகாசி

நாள் : 28

ஆங்கில தேதி : 11

ஆங்கில மாதம் : ஜூன்

வருடம் : 2025

நட்சத்திரம் : இன்று இரவு 08-59 வரை கேட்டை பின்பு மூலம்

திதி : இன்று பிற்பகல் 11-53 வரை பௌர்ணமி பின்பு பிரதமை

யோகம் : சித்த, மரண யோகம்

நல்ல நேரம் காலை : 9-30 - 10-30

நல்ல நேரம் மாலை : 4-30 - 5-30

ராகு காலம் மாலை : 12-00 - 1-30

எமகண்டம் காலை : 7-30 - 9-00

குளிகை காலை : 10-30 - 12-00

கௌரி நல்ல நேரம் காலை : 10-30 - 11-30

கௌரி நல்ல நேரம் மாலை : 6-30 - 7-30

சூலம் : வடக்கு

சந்திராஷ்டமம் : பரணி, கிருத்திகை

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

ரிஷபம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும். மேலதிகாரிகள் தங்களுக்குண்டான மதிப்பை அளிப்பர். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். நினைத்த காரியம் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. தேக ஆரோக்கியம் சிறப்பாகும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மிதுனம்

விற்பனைபிரதிநிதிகள் தங்கள் இலக்கினை முடிப்பர். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கடகம்

பயணங்களால் ஆதாயம் உண்டு. பிரிந்த உறவினர் உங்களை தேடி வருவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர். வர வேண்டிய பணம் வசூலாகும்.

அதிர்ஷ்ட நிறம் : பொன்நிறம்

சிம்மம்

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உறவினர்களால் நன்மை உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். உடல் வலிமை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கன்னி

பங்குச் சந்தை லாபம் தரும். மார்கெட்டிங் பிரிவில் உள்ளவர்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பத்தை கையாளுவீர்கள். தம்பதிகள் விட்டுக் கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடல் நலம் சுகம்பெறும்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

துலாம்

காதலர்களுக்கு நற்செய்தி கிடைக்கும். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பண வரவு அதிகரிக்கும். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீர்படும்.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்

விருச்சிகம்

ஆன்மீகத்தில் மனம் நாடும். தம்பதிகள் ஒற்றுமை காப்பர். தேவையில்லாத மனபயம் விலகும். திருமணம் கோலாகரமாக நடக்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நவீன பொருட்களின் செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

தனுசு

கணவன் மனைவி உறவு இனிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவுவர். பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். பெற்றோரின் கனவு பலிக்கும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மகரம்

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுண்டு. ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். மருத்துவர்கள் செழிப்பர். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும்.வெளியூர் பயணம் தடைபடும். தொலைபேசி மூலம் நட்பு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

கும்பம்

உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். அரசியலில் நாட்டம் ஏற்படும். தேகத்தில் உற்சாகம் வெளிப்படும். எதிரிகள் தங்கள் தவறை உணர்வர். தம்பதிகள் வெளியிடங்களுக்குச் செல்வர். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம் ட: கடல்நீலம்

மீனம்

குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு. வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். அரசியலில் நாட்டம் கூடும். நண்பர்கள் கைக் கொடுப்பர். முகம் புதுப்பொலிவு கூடும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

Read Entire Article