இன்றைய ராசிபலன் - 07.10.24

3 months ago 24

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி வருடம் புரட்டாசி மாதம் 21-ம் தேதி திங்கட்கிழமை

நட்சத்திரம்: இன்று முழுவதும் அனுஷம்

திதி : இன்று காலை 07.22 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி

யோகம் : சித்த யோகம்

நல்ல நேரம் காலை : 6.15 - 7.15

நல்ல நேரம் மாலை : 4.45 - 5.45

ராகு காலம் காலை : 07.30 - 09.00

எமகண்டம் காலை : 10.30 - 12.00

குளிகை மாலை : 1.30 - 3.00

கௌரி நல்ல நேரம் காலை : 09.15 - 10.15

கௌரி நல்ல நேரம் மாலை : 7.30 - 8.30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : ரேவதி, அஸ்வினி

ராசிபலன்

மேஷம்

மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. பரணி, கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இன்று சந்திராஷ்டமம் இல்லை. கவலை வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

ரிஷபம்

உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் யாரிடமும் அதிக நெருக்கமின்றி இருப்பது நல்லது. தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். இருவரும் இணைந்து முடிவெடுப்பர். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். வழக்கறிஞர்கள் தங்கள் வழக்கில் வெற்றியை நிலைநாட்டுவர். தங்கள் புகழ் ஓங்கும். பெண்கள் குடும்ப மரியாதை காப்பாற்றுவர்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மிதுனம்

எதிர்பார்த்திருந்த வெளிநாட்டில் இருக்கும் தங்கள் நண்பர் தங்களை சந்திக்க வருவர். வழக்கறிஞர்களுக்கு தங்களின் வழக்கு சாதகமாகச் செல்லும். கலைநிகழ்ச்சி நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பெண்கள் அத்தியாவசிய செலவினை சமாளிப்பர். நட்பால் ஆதாயம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கடகம்

தம்பதிகளிடையே இணக்கம் அதிகரிக்கும். காதலர்கள் தங்கள் பொறுப்பினை உணர்வர். வெளிநாடு சென்றுவர விசா கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாட்டிலேயே சென்று வாழும் யோகமும் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

சிம்மம்

எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி மகிழ்ச்சியைத் தரும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் உதவி கிடைக்கும். மார்கெட்டிங் பிரவினர்களுக்கு சம்பள உயர்வும் இன்சன்டிவ் கிடைக்கும். தங்கள் மனைவி தங்களிடம் உண்மையாக இருப்பார். அவர்கள் தங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கன்னி

புதிய நபர்களின் தொடர்பு கிடைக்கும். தங்கள் விடாமுயற்சியால் முக்கியமான ஒன்றை முடித்துக் காட்டுவீர்கள். பத்திரிகையாளர்கள் சுபிட்சம் காண்பர். தங்கள் அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும். இன்று குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

துலாம்

குறுகிய தூர பயணங்கள் அதிகரிக்கும். அந்த பயணங்கள் தங்களுக்கு நன்மையைத் தரும். தங்கள் கீழ் வேலை பார்க்கும் எடுபிடி வேலையாட்களிடம் கோபம் வேண்டாம். அவர்களை தட்டிக் கொடுத்து வேலைவாங்கவும். எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே நிகழும். பெண்கள் செலவினை சமாளிப்பர். வேற்றுமதத்தவர் உதவுவர்.

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

விருச்சிகம்

கூட்டு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். தம்பதிகளின் அன்பு மேலோங்கும். உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேகம் பளபளக்கும். வெளியூரிலிருந்து தங்கள் உறவினர்கள் வருகை உண்டு. அவர்களால் நன்மை உண்டு. பணம் பாக்கெட்டை நிரப்பும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

புதிய வாகனம் வாங்க திட்டுமிடுவீர்கள். உங்கள் வீட்டில் பணிபுரிபவர்கள் உண்மையாக இருப்பர். அவர்கள் தேவையை பூர்த்தி செய்வீர்கள். கல்லூரி மற்றும் பள்ளியில் வேலைசெய்யும் ஆசிரியர்கள் தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். விடுமுறை என்பதால் குல தெய்வ கோவில் செல்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

மகரம்

நீண்ட நாட்களாக தங்கள் பெற்றோர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உடல் நலம் சீராகும். இன்று சொத்து ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்கள் சாதனைபுரிவர். வியாபாரம் செழிப்புறும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

உத்யோகஸ்தர்கள் தங்களுடன் பணிபுரியும் மற்ற ஊழியர்கள் அதனை பிரித்துக் கொள்வர். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர். தங்களுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பணிபுரிய தங்களுக்கு அனுமதி கிடைக்கும். வெளிநாட்டில் தங்களுடைய தொழில் பிரசித்தி பெறும். அங்கும் தங்கள் தொழிலை விரிவுப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

மீனம்

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு கவலை வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

Read Entire Article