இன்றைய ராசிபலன் - 04.06.2025

1 day ago 5

இன்றைய பஞ்சாங்கம்:-

விசுவாவசு வருடம் வைகாசி 21-ம் தேதி புதன்கிழமை

நட்சத்திரம்: இன்று அதிகாலை 04.52 வரை பூரம் பின்பு உத்திரம்

திதி: இன்று அதிகாலை 02.05 வரை அஷ்டமி பின்பு நவமி

யோகம்: அமிர்த யோகம்

நல்ல நேரம் காலை: 9.30 - 10.30

நல்ல நேரம் மாலை: 4.30 - 5.30

ராகு காலம் மாலை: 12.00 - 1.30

எமகண்டம் காலை: 7.30 - 9.00

குளிகை காலை: 10.30 - 12.00

கௌரி நல்ல நேரம் காலை: 10.30 - 11.30

கௌரி நல்ல நேரம் மாலை: 6.30 - 7.30

சூலம்: வடக்கு

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

ராசிபலன்:-

மேஷம்

விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும். மார்கெட்டிங் பிரிவினர் புதுப் புது ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவை. வேலை தேடுபர்களுக்கு புதிய உத்யோகம் கிடைக்கும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். உத்யோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

ரிஷபம்

அலுவலகத்தில் விடுபட்ட நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். உத்யோகம் முன்பை விட சாதகமாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பழைய கடன்கள் அடைபடும். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

மிதுனம்

எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். வருமானம் உயரும்.ஆனால், பல் வலி வந்துபோகும். தொண்டை புகைச்சல் அதிகமாகும். கட்சித் தலைமையுடனான மோதல்கள் விலகும். புகழ் பெற்ற பகுதிக்கு உங்களுடைய கடையை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள்

கடகம்

உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். தொலைக்காட்சி வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். நடைபாதை வியாபாரிகளுக்கு நல்ல விற்பனை கூடும். பெண்கள் நகை விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றமும் இப்போது கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அவருக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். தங்கள் பிள்ளைகளின் திருமண கனவு நிறைவேறும். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி வகை பிறக்கும். பங்குதாரராக இருந்தால் லாபம் அதிகம் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கன்னி

குடும்பத்தில் நீண்டநாட்களாக நினைத்த நல்ல காரியம் நடக்கும். உறவுகாரர்களுடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். உங்களுடைய ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மனைவி வழியில் உதவிகள் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

துலாம்

கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். தம்பதிகளின் வாழ்வில் மகிழ்ச்சி என்ற தென்றல் வீசும். காதல் விசயத்தில் விழிப்பாக இருப்பது நலம். குடும்பத்தை சற்று கவனத்தில் கொள்வது நல்லது. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

விருச்சிகம்

வியாபாரம் சிறப்பாக இருக்கும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது. தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கூடி வரும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்

தனுசு

உத்யோகஸ்தர்களுக்கு நல்ல சம்பள உயர்வு உண்டு. ஈகோ பிரச்சினையாலும் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். எனவே, பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் இனி நீங்கும் தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

திருவோணம், அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

பிள்ளைகளை தங்கள் சொல்படி நடப்பர். இனி உங்கள் அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். விற்பனை பிரதிநிதிகள் தங்கள் விற்பனையை கூட்டுவர். இது வரை சொந்த-பந்தங்கள் மத்தியில் மனக்கசப்பையும், அவமானத்தையும் தாங்கி கொண்டிருந்த நீங்கள் தற்போது அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள். மதிப்பும் பரியாதையும் கூடும்

அதிர்ஷ்ட நிறம் ஊதா

மீனம்

பயணங்களின் போது மற்ற சிந்தனைகளை ஒதுக்குவது நல்லது. அரசு தொடர்பான காரியங்கள் முடிவுக்கு வரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே நல்ல பதில் வரும். கௌரவப் பதவி தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

 

Read Entire Article