இன்றும் நாளையும் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்: பதிவுத்துறை உத்தரவு

6 months ago 21

சுபமுகூர்த்த தினத்தில் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என்பதை கருத்தில் கொண்டு இன்றும், நாளையும் தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். தற்போது ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான நவ.7-ம் தேதி மற்றும் 8-ம் தேதி அதாவது இ்ன்றும், நாளையும் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் டோக்கன்கள் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

Read Entire Article