சென்னை,
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"இன்று யார் யாரோ பெரியார் குறித்து பேசி வருகின்றனர். அப்படி பெரியாரை விமர்சிப்பவர்கள் குறித்து பேசி அவர்களை நான் அடையாளம் காட்ட விரும்பவில்லை. தன்னுடைய உயிர் பிரியும் கடைசி நிமிடம் வரை தமிழுக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் சமுதாயத்திற்காக, குறிப்பாக பெண்களின் உரிமைகளுக்காக போராடியவர், வாதாடியவர் தந்தை பெரியார்."
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.