சென்னை: தீபாவளி பண்டிகை வரும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கு, சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து (அக்.29, 30) புறப்படும் அனைத்து ரயில்களிலும் ஏற்கெனவே முன்பதிவு முடிந்துவிட்டது. இந்த ரயில்களில் மொத்தமாக 7,000 பேர் வரை காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இதை கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காத்திருப்போர் எண்ணிக்கை அதிகம் உள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து இயக்கப்படும் சதாப்தி, முத்துநகர், காரைக்கால், ஏற்காடு உள்ளிட்ட 32 ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைப்படுகிறது. அந்த ரயில்கள் விவரம் பின்வருமாறு: சென்னை சென்ட்ரல் கோவை இடையே அக்டோபர்30, நவம்பர் 3ம் தேதி இரு மார்க்கமாக இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயிலில் ஒரு சேர் கார் பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல்-நாகர்கோவிலுக்கு நவம்பர் 1ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயிலில் 1 பெட்டியும், மறுமார்க்கமாக, நவம்பர் 3ம் தேதி நாகர்கோவில் சென்னைக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் 1 பெட்டியும் கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூர்-தூத்துக்குடிக்கு அக்டோபர் 30, நவம்பர் 1, 3, 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் முத்து நகர் விரைவு ரயிலில் 1 பெட்டிகூடுதலாக இணைக்கப்பட உள்ளது. மறுமார்க்கமாக, தூத்துக்குடி-சென்னை எழும்பூருக்கு அக்டோபர் 29,31, நவம்பர் 2,4 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் முத்துநகர் விரைவு ரயிலில் 1 பெட்டி கூடுதலாக சேர்த்து இயக்கப்பட உள்ளது. மொத்தம் 32 விரைவு ரெயில்களில்கூடுதலாக ஒரு பெட்டி சேர்க்கப்பட உள்ளது. வரும் 29ஆம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.
The post இன்று முதல் நவம்பர் 4ம் தேதி வரை 32 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு appeared first on Dinakaran.