இன்று மாலை வெளியாகும் "கூலி" படத்தின் 'மோனிகா' பாடல்

7 hours ago 2

சென்னை,

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் 'வேட்டையன்' படத்தின் வெற்றிப்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளனர். மேலும் கேமியோ ரோலில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாகப்பட்டுள்ள, இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இப்படத்தின் முதல் பாடலான 'சிக்கிட்டு' என்ற முதல்பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து இரண்டாவது பாடலின் அறிவிப்பினை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ள 'மோனிகா' என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

Monica bellucci, Erangi vandhachi #Coolie Second Single #Monica starring @hegdepooja, from today 6 PM! ❤️#Coolie worldwide from August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @anbarivpic.twitter.com/4NmKfEJbmf

— Sun Pictures (@sunpictures) July 11, 2025
Read Entire Article