
சென்னை,
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் புரமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே படக்குழுவினர் மும்பை, டெல்லி, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். தற்போது கங்குவா படக்குழுவினர் தமிழ் நாட்டிற்கு திரும்பி உள்ளனர்.

அதன்படி கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணியளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.