இன்று நடக்கிறது ரயில்வே தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

4 months ago 12

விருதுநகர், பிப்.17: ரயில்வே காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது: ரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் 32,438 பணிக் காலிப்பணியிடங்கள் ஜனவரி 21ம் தேதி அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு இம்மாதம் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு விருதுநகர் சிவகாசி சாலையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் இன்று நடைபெறுகிறது.

இவ்வகுப்பு திறன் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் https://forms.gle/8hB1dvzGvctLtMAs9 என்ற கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலதிக விபரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை 93601-71161 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்புகொண்டு அறியலாம். எனவே இத்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்று நடக்கிறது ரயில்வே தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article