இன்று கோவை செல்கிறார் துணை முதல்-அமைச்சர் உதயநிதி

4 weeks ago 9

கோவை,

கோவையில் நடைபெறும் 4 நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கோவை செல்கிறார்.

இதன்படி இன்று நண்பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் செல்லும் அவருக்கு அங்கு மேட்டுப்பாளையம், சூலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க.வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

நண்பகல் 12.15 மணிக்கு பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் சிங்காநல்லூர் தொகுதி, தெற்கு தொகுதி தி.மு.க.வினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து மதியம் 3.00 மணிக்கு தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி.) நடைபெற உள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மாலை 4 மணிக்கு கோவை சத்தி சாலையில் ஆம்னி பஸ் நிலையம் எதிரில் பெத்தேல் மாநகர பேராலயத்தில் நடைபெற உள்ள பெந்தேகொஸ்தே சபைகளின் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்கிறார்.

மாலை 5 மணிக்கு கோவை வ.உ.சி. மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள கோவை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.

மாலை 5.30 மணிக்கு கோவை நவஇந்தியா அருகே எஸ்.என். ஆர். கலையரங்கத்தில் நடைபெறும் மாவட்ட அணிகளின் தலைவர், துணைத்தலைவர், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை யொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article