
கோவை,
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஆர்.எஸ்.புரத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பேரணி மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையொட்டி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தலைமையில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என்று 2 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் இன்று காதலர் தினம் என்பதால் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பஸ் நிலையங்கள், பூங்காக்கள், கோவையில் உள்ள குளக்கரைகள் ஆகியவற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.