இன்று உலக சிக்கன நாள் கொண்டாட்டம் - அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்

4 months ago 17

சென்னை: இன்று உலக சிக்கன நாளையொட்டி மக்கள் அனைவரும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக சிக்கன நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: பொதுமக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி (இன்று) உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்நாளில் சிக்கனமாக செலவு செய்து, வருவாயில் ஒரு பகுதியை சேமிப்பாக்கி, எதிர்காலத்தில் பெரும் பயனடைந்து, வீட்டுக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதையே இந்த உலக சிக்கன நாள் வலியுறுத்துகிறது.

Read Entire Article