நாய்க்கு விஷம் வைத்த தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 6 பேர் மீது போலீசார் வழக்கு

2 hours ago 1

 

போடி, நவ. 18: போடி அருகே நாய்க்கு விஷம் வைத்த தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டப்பட்டது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடி அருகே மேல சொக்கநாதபுரம், வினோபாஜி காலனி வீரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் (39), கூலி தொழிலாளி. இவர் வீட்டின் எதிரில் குடியிருக்கும் தியாகராஜன் என்பவர் வளர்த்த நாய் சமீபத்தில் இறந்தது. பாக்கியராஜ் தான் விஷம் வைத்து நாயை கொன்றதாக தியாகராஜன் நினைத்தார்.

இதனால் அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பாக்கியராஜ் அந்த வழியாக நடந்து சென்ற போது, அவரை தியாகராஜன் மற்றும் குடும்பத்தினர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தியாகராஜன் அரிவாளால் பாக்கியராஜின் முதுகில் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் போடி தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ மணிகண்டன் மற்றும் போலீசார், 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நாய்க்கு விஷம் வைத்த தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 6 பேர் மீது போலீசார் வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article