இன்னிங்ஸ், 70 ரன் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்தியது தமிழ்நாடு

3 months ago 14

கோவை: சவுராஷ்டிரா அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் டி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 203 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 367 ரன் குவித்து ஆல் அவுட்டானது (நாராயன் ஜெகதீசன் 100, சாய் சுதர்சன் 82, பிரதோஷ் 49, இந்திரஜித் 40, சித்தார்த் 38, முகமது 26*). சவுராஷ்டிரா பந்துவீச்சில் கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் 6 விக்கெட் கைப்பற்றினார்.

இதை யடுத்து, 164 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி, அறிமுக வீரர் குர்ஜப்னீத் சிங்கின் இடது கை வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. அந்த அணி 14.2 ஓவரில் வெறும் 16 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. 3ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பு 35 ரன் எடுத்திருந்த (25 ஓவர்) சவுராஷ்டிரா, நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் 94 ரன்னுக்கு சுருண்டது (40.4 ஓவர்).

ஷெல்டன் ஜாக்சன் அதிகபட்சமாக 38 ரன், அர்பித் வாசவதா 22, உனத்கட் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். தமிழ்நாடு பந்துவீச்சில் குர்ஜப்னீத் 14 ஓவரில் 5 மெய்டன் உள்பட 22 ரன்னுக்கு 6 விக்கெட் வீழ்த்தினார். சோனு யாதவ் 3, சாய் கிஷோர் 1 விக்கெட் கைப்பற்றினர். தமிழ்நாடு 7 புள்ளிகளை தட்டிச் சென்றது. ஆட்ட நாயகனாக குர்ஜப்னீத் சிங் தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு தனது 2வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது. அந்த ஆட்டம் அக்.18ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது.

The post இன்னிங்ஸ், 70 ரன் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்தியது தமிழ்நாடு appeared first on Dinakaran.

Read Entire Article