உத்தமபாளையம்: தேனி மாவட்டம், தேவாரம் அருகே எர்ணம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ், இவர், உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்துக்கு பட்டா மாறுதலுக்காக சென்றார். அங்கிருந்த ஒருவர் தன்னை துணை தாசில்தார் என அறிமுகம் செய்து, அங்கு இருந்த நபரை தாசில்தார் என கூறி அவரிடம் பட்டா மாறுதலுக்காக 4 தவணைகளில் ரூ.1.07 லட்சத்தை சந்திரபோசிடம் வாங்கியுள்ளனர். ஆனால் பணியை முடித்து தரவில்லை.
விசாரணையில் தாசில்தார் என பணம் வாங்கியது இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்செல்வா, துணை தாசில்தார் என கூறியது இந்து முன்னணி நகரத்தலைவர் பெரியசாமி தாக்கரே என தெரியவந்தது. ராம்செல்வாவை போலீசார் கைது செய்தனர்.
The post இந்து முன்னணி நிர்வாகி கைது appeared first on Dinakaran.