இந்து பெண்களுக்கு கருத்தடை சாதனம் பொருத்தப்படுவதாக குற்றம் சாட்டிய இந்து முன்னணி மாநில செயலாளர் கைது

4 months ago 11

திருநெல்வேலி: இந்து பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இன்றி கருத்தடை சாதனம் பொருத்தும் செயல் இந்துக்களின் மக்கள் தொகையை கருவறுக்கும் செயலாகும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினரின் சம்மதம் எதுவும் பெறாமல் கருத்தடை சாதனமான காப்பர் டி வைத்துள்ளனர் என்று இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் புகார் தெரிவித்தார்.

Read Entire Article