
சென்னை,
இந்து சமய அறநிலையத் துறையில், சென்னை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள 6 பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்து மதத்தை பின்பற்றுபவராக இருத்தல் வேண்டும். வயது வரம்பினை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 1.07.2024 தேதிப்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
அதன்படி ஆதி திராவிடர் (அருந்ததியர்), ஆதி திராவிட, பழங்குடி வகுப்பினர், 37 வயது வரை விண்ணபிக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தபடுத்தப்பட்டோர் 34 வயது வரை விண்ணபிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்
ஆப்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் இணையதள http://hrce.tn.gov.in லிங்கில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, முழுமையாகக் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி. "ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, எண்.119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-600 034" என்ற முகவரிக்கு வரும் 28.05.2025 மாலை 05.45 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட நாளுக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.