இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் திட்டம்: ஜூலை 25க்குள் விண்ணப்பிக்கலாம்

4 hours ago 2

திருச்செந்தூர்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் திட்டத்திற்கு முன்பதிவு நடைபெறுகிறது. வருகிற 25ம் தேதிக்கு முன்னதாக உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மணிவிழா கண்ட 70 வயது பூர்த்தியடைந்த, இந்து மதத்தைச் சார்ந்த ஆன்மீக ஈடுபாடுள்ள 100 தம்பதியர்கள் வீதம் 20 இணை ஆணையர் மண்டலங்களில் 2000 தம்பதியருக்கு கோயில்கள் சார்பில் சிறப்பு செய்யப்படும் என அறிவித்திருந்தார்.

இத்திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் ஒரு தம்பதியருக்கு ரூ.2500 செலவில் புடவை (ரவிக்கை உட்பட), வேட்டி, சட்டை, மாலை (2), வெற்றிலை, பாக்கு, பூ, மஞ்சள், குங்குமம், மஞ்சள்கயிறு, வாழைப்பழம் (1 சீப்), பழ வகைகள், எவர்சில்வர் தட்டு, கண்ணாடி வளையல், சுவாமி படம் (சட்டை பை அளவு) என 11 வகை பொருட்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது. எனவே விருப்பமுள்ள தம்பதிகள் அருகிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் மூலம் வருகிற 25.07.2025 தேதிக்கு முன்னதாக உரிய படிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் திட்டம்: ஜூலை 25க்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article