இந்து சமய அறநிலைய துறை சார்பில் அரியலுர் கோதண்ட ராமசாமி கோயிலில் இலவச திருமணம்

3 months ago 8

 

அரியலூர், பிப். 15: அரியலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும், அரியலூர் கோதண்ட ராமசாமி திருக்கோயில் சார்பில் இரண்டு ஜோடிகளுக்கு இலவச திருமணம், பெருமாள் கோயிலில் நேற்று நடத்தி வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் உத்தரவுப்படியும், திமுக மாவட்ட கழகச் செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படி , அரியலூர் நகராட்சி பகுதியை சேர்ந்த மணமகன் யோகநாதன் – மணமகள் புவனேஸ்வரி மற்றும் செந்துறை வட்டம், நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த மணமகன் செந்தில்குமார்,

மணமகள் சர்னிஷா ஆகியோரின் திருமணத்தை , நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட , கல்லங்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆதின பரம்பரை தர்மகர்த்தா வெங்கடஜலபதி படையாச்சியார் திருமாங்கல்யம் எடுத்து தந்து நடத்தி வைத்தார். தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில், 60 ஆயிரம் மதிப்பிட்டிலான திருமாங்கல்யம் மற்றும் மணமக்கள் சீர் வரிசைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சரவணன் , இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் மற்றும் மணமக்கள் பெற்றோர்கள் , உறவினர்கள் பலர் உடனிருந்தனர்.

 

The post இந்து சமய அறநிலைய துறை சார்பில் அரியலுர் கோதண்ட ராமசாமி கோயிலில் இலவச திருமணம் appeared first on Dinakaran.

Read Entire Article