இந்து அறநிலையத்துறை ஏற்பாடு படைவீரர்கள் வாரிசுகளுக்கு பாரதப்பிரதமர் கல்வி உதவி தொகை

3 months ago 21

திருவாரூர், செப், 30: திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் முன்னாள் படைவீரர்கள் தங்களது சிறார்களுக்கு பாரதப்பிரதமரின் கல்வி உதவி தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிறுப்பதாவது,
2024 -25-ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதியுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களின் வாரிசுதாரர்கள் www.ksb.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கம் மற்றும் விவரக்குறிப்பின்படி, இணையதளம் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பாரதப் பிரதமர் கல்வி உதவித்தொகை முன்னாள் படைவீரர்களின் பெண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் – ஆண்டுக்கு ரூ.36 ஆயிரமும், -ஆண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.2 ஆயிரத்து 500-வீதம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

இணையதளத்தில் விண்ணப்பிக்க படை பணிச்சான்று சுருக்கம்பெற (Annexure1) முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகல் சான்று, ஓய்வூதிய ஆணைநகல், அடையாள அட்டை மற்றும் சிறாரின் கல்விச்சான்று ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடத்தில் இயங்கி வரும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகலாம். மேலும், இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள் வரும் நவம்பர் 30ந் தேதி. எனவே திருவாரூர் மாவட்டத்தினைச் சார்ந்த தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் இந்த பாரதப் பிரதமர் கல்விஉதவி தொகை பெற இணையவழி விண்ணப்பம் செய்து பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post இந்து அறநிலையத்துறை ஏற்பாடு படைவீரர்கள் வாரிசுகளுக்கு பாரதப்பிரதமர் கல்வி உதவி தொகை appeared first on Dinakaran.

Read Entire Article