புதுடெல்லி: தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் தமிழ்நாட்டின் அச்சத்தை ஒன்றிய அரசு புரிந்து கொள்ளவில்லை என்று பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் அளித்த பேட்டி: தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக தமிழ்நாடு மற்றும் தென்மாநில மக்களின் அச்சங்களை, தற்போதைய ஒன்றிய அரசு முற்றிலும் உணர்ந்து கொள்ளாமல் உள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் கல்வியில் இந்தி திணிப்பு மட்டுமல்ல, கல்வியில் பல்வேறு மாதிரிகள் திணிக்கப்படுமோ என்ற அச்சமும் தமிழ்நாட்டின் எதிர்ப்புக்கு ஒரு காரணம். நாம் ஒரு பன்மொழி சமூகம். அரசியலமைப்புச் சட்டம் கூட 22 மொழிகளை அங்கீகரிக்கிறது.
இவை தேசிய மொழிகளாகக் கருதப்படுகின்றன. அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து இருப்பதாக நாங்கள் கருதுகிறோம் எனவே, இந்த பன்முகத்தன்மையை நாம் உணர்ந்து, மொழி அதன் சொந்த வளர்ச்சியை அங்கீகரிக்க வேண்டும். எந்த மொழியையும் பிறர் மீது திணிக்க முடியாது, அது தானே வளர்ச்சியடைய விட வேண்டும். இந்த மொழியை அலுவல் மொழி என்று செயற்கையாகச் சொல்ல முடியாது. ஆங்கிலம் கற்கவும் பயன்படுத்தவும் இப்போது சர்வதேச அளவில் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே, நீங்கள் அனைத்து மொழிகளையும் வளர அனுமதிக்க வேண்டும், அவற்றுக்கு சமமான அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுக்க வேண்டும்.
அப்படிச்செய்யும் போது, இறுதியில் இந்தியாவில் உள்ள மொழிகளில் ஒன்று ‘பொது மொழி’ என்ற அந்தஸ்தைப் பெறும் என்று நான் நினைக்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்.
* இந்தியா கூட்டணி நிலை என்ன?
பிரகாஷ்காரத் கூறுகையில்,’மக்களவை தேர்தலுக்கு பின் தேசிய அளவில் கூட்டணி குறித்து எந்த விவாதமும் இல்லை. மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் பரந்த எதிர்க்கட்சி தளம் அல்லது ஒற்றுமைக்கான தேவை உள்ளது’ என்றார்.
The post இந்தியை திணிக்க முயல்கிறார்கள் தமிழ்நாட்டின் அச்சத்தை புரிந்து கொள்ளவில்லை: ஒன்றிய அரசுக்கு பிரகாஷ் காரத் கண்டனம் appeared first on Dinakaran.