இந்தியில் மட்டுமே தான் பேசுவேன்: எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம்..!!

6 hours ago 2

கர்நாடகா: கர்நாடகாவில் கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து இந்தியில் மட்டுமே தான் பேசுவேன் என வாடிக்கையாளர்களிடம் முறையிட்ட எஸ்.பி.ஐ. வங்கி மேலாளருக்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் எஸ்பிஐ வங்கியில் மொழி பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் கன்னடத்தில் பேசியுள்ளார்.

அதற்கு அந்த கிளை மேலாளர் இந்தியில் பதில் கொடுத்துள்ளார். அப்போது அந்த வாடிக்கையாளர் இது கர்நாடகா நீங்கள் எங்கள் மொழியில் தான் பேச வேண்டும் என்று கூற, அதற்கு அந்த வங்கி மேலாளர் நான் ஒருபோதும் கன்னடத்தில் பேசமாட்டேன் இந்தியில் தான் பேசுவேன் என்று கூறி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் சிதராமையா இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது; கன்னடம், ஆங்கிலத்தில் பேச மறுத்து மக்களை அலட்சியப்படுத்திய எஸ்.பி.ஐ வங்கி மேலாளரின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது.

வங்கி ஊழியர்கள் அனைவரும் மக்களை கண்ணியத்துடன் அணுக வேண்டும், மாநில மொழியில் பேச முயற்சிக்க வேண்டும். வங்கி ஊழியர்களுக்கு மாநில கலாசார, மொழியை மதிப்பதற்கான விழிப்புணர்வு வகுப்புகளை ஒன்றிய நிதியமைச்சகம் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post இந்தியில் மட்டுமே தான் பேசுவேன்: எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா கடும் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article