இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நல்லுறவு நீடிப்பது இருநாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது- பிரதமர் மோடி

3 weeks ago 5
இந்தியா -சீனா எல்லைப் பகுதியில் பரஸ்பர மரியாதை நம்பகத்தன்மையோடு அமைதி நீடித்திருக்க வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் கஸான் நகரில் பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே இருதலைவர்களும் எல்லைப் பிரச்சினை பற்றி விவாதித்தனர். அண்மையில் இருதரப்பிலும் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 2020ம் ஆண்டின் நிலைப்பாட்டின் படி ரோந்துப்பணிகளை மேற்கொள்ள உடன்படிக்கை எட்டப்பட்டதை மோடியும் ஜின்பிங்கும் வரவேற்றனர்.   இச்சந்திப்பு குறித்து குறிப்பிட்ட மோடி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நல்லுறவு நீடிப்பது இருநாடுகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்று தெரிவித்தார். மோடியுடனான சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சீன அதிபர் ஜின்பிங், இருதரப்பு உறவுகளும் சரியான திசையில் தொடர்வதாக கூறினார். 
Read Entire Article