
லண்டன்,
2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டெஸ்ட் தொடர் இந்தியா - இங்கிலாந்து இடையே தொடங்குகிறது. இந்திய அணி வரும் ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில், இந்த தொடர் குறித்து இங்கிலாந்து சீனியர் வீரர் ஜோ ரூட் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
எங்களுடைய சொந்த மண்ணில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஆனால், இந்தியா போன்ற அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வரும்போது அப்படி சொல்வதற்கு ஏதும் இல்லை.
இது நீண்ட் நாட்கள் கொண்ட தொடர். தொடர்ந்து நிலையான பார்ம் பெற்றிருப்பது அவசியம். நேரத்திற்கு நேரம், மீண்டும் மீண்டும் போட்டியில் வெற்றிக்கான செயல்பாட்டை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.