
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஒல்லி ஸ்டோன் தவற விட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மூட்டு வலி காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ள அவர், முழுமையாக குணமடைய 14 வாரங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக எதிர்வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர் தவற விட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனெவே அந்த அணியின் மற்றொரு முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் பங்கேற்க முடியாத சூழலில், தற்போது ஒல்லி ஸ்டோனும் விலகியுள்ளது பின்னடைவாக கருதப்படுகிறது.