இந்தியாவில் தரையிறங்கிய F35 போர் விமானத்தை பாகங்களாக பிரித்தெடுத்து இங்கிலாந்து கொண்டு செல்ல திட்டம்!!

3 hours ago 1

திருவனந்தபுரம்: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14 அன்று திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் கடற்படையின் F-35B போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஒரு நாட்டின் போர் விமானம் திடீரென மற்றொரு நாட்டின் எல்லைக்குள் அனுமதிக்கப்படுவது, 2 வாரங்களுக்கு மேல் நிறுத்தப்படுவது மிகவும் அரிதான ஒன்று. இயந்திர கோளாரால் நிறுத்தப்பட்ட F-35 விமானத்தை அதை சரிசெய்ய பிரிட்டனைச் சேர்ந்த 40 பொறியாளர்கள் கொண்ட குழுவின் முயற்சிகள் தோல்வியடைந்தன. இரண்டு வாரங்களாக சிக்கலைத் தீர்க்க முடியாததால், விமானத்தை இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்புவதே சிறந்தது என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, போர் விமானம் C-17 குளோப்மாஸ்டர் எனப்படும் பெரிய போக்குவரத்து விமானத்தில் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படும்.

இருப்பினும், F-35 விமானத்தின் இறக்கைகள் சுமார் 11 மீட்டர் என்றாலும், C-17 சரக்கு இருப்பு அகலம் 4 மீட்டர் மட்டுமே. இதனால் விமானத்தை நேரடியாக உள்ளே ஏற்றுவது சாத்தியமில்லை. எனவே, அதன் இறக்கைகளைப் பிரித்து விமானத்தை பாகங்களாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதிநவீன ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் விமானத்தின் இறக்கைகளைப் பிரிப்பது மிகவும் சிக்கலான செயல்முறை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இவ்வாறு செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில், அமெரிக்காவிலும் தென் கொரியாவிலும் F-35 விமானங்களின் இறக்கைகள் இதேபோன்ற முறையில் அகற்றப்பட்டு வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டிருக்கின்றன. இந்த செயல்முறை ஒரு சில நாட்களில் முடிக்கப்பட்டு, விமானம் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் தரையிறங்கிய F35 போர் விமானத்தை பாகங்களாக பிரித்தெடுத்து இங்கிலாந்து கொண்டு செல்ல திட்டம்!! appeared first on Dinakaran.

Read Entire Article