
புதுடெல்லி,
இப்போது இருக்கும் காலத்தில் சர்க்கரை என்பது மிகவும் அத்தியாவசிய தேவையாக உள்ளது. அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுப்பொருள் என்றாலே அது இனிப்பு வகையான பண்டங்கள்தான்.
இந்நிலையில் சர்க்கரையின் உற்பத்தியானது குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் சர்க்கரையின் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது. 2024-25 ஆம் சந்தைப் பருவத்தில் இந்திய சர்க்கரை உற்பத்தி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தற்போது 13.63 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது.
இதன் உற்பத்தி அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 130.55 லட்சம் டன்னாக உள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில் முன்னணி சர்க்கரை உற்பத்தி மாநிலங்களான உத்தர பிரதேசம், மராட்டியம், கர்நாடகாவிலும் சர்க்கரை உற்பத்தி குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.