இந்தியாவில் ஆப் ஸ்டோரில் முதன்மையான செய்தி செயலி எக்ஸ்: எலான் மஸ்க்

4 hours ago 2

 சான் பிரான்சிஸ்கோ,

இந்தியாவில் செய்திக்கான பயன்பாட்டில் எக்ஸ் தளம், இந்தியாவின் ஆப் ஸ்டோரில் முதல் செய்தி செயலியாக மாறியுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இது குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் ஆப் ஸ்டோரில் முதன்மையான செய்தி செயலியாக பயன்பாட்டில் உள்ளது. எக்ஸ் தளத்தில் ஒரு புதிய அம்சத்தையும் வெளிப்படுத்தியது. "பிரெக்கிங் நீங்கள் இப்போது ரீவைண்ட் செய்யலாம் எக்ஸ் தளத்தில் நேரடி வீடியோவை டாட்ஜ் டிசைனர் பயனர் ஒருவர் பதிவிட்டதைத் தொடர்ந்து எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்தார்.

பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தை 4.4 பில்லியன் டாலருக்கு (ரூ. 3.6 லட்சம் கோடி) எலான் மஸ்க் கடந்த அக்டோபர், 2022-ம் ஆண்டு சொந்தமாக்கினார். டிவிட்டரை வாங்கியதுடன் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்கியதுடன் அதன் பாரம்பரிய 'நீலக் குருவி' லோகோவை மாற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

is now #1 for news in India! https://t.co/beLobq1Dfo

— Elon Musk (@elonmusk) November 22, 2024

BREAKING: is now the #1 news app on the AppStore in India pic.twitter.com/jMxDsVjLWC

— DogeDesigner (@cb_doge) November 22, 2024
Read Entire Article