![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/23/35353892-cmstalinone33.webp)
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இரும்பின் தொன்மை நூல் வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ் குடி என்றார்கள். தமிழ் நிலப்பரப்பில் இருந்தே இரும்பு காலம் தொடங்கி உள்ளது. இரும்பை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் இருந்துள்ளது. தமிழ் பண்பாட்டை உலகிற்கு சொல்லும் விழாவாக இந்த விழா அமைந்துள்ளது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகம் என ஆய்வு முடிவுகள் கூறுகிறது. இது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - தமிழ் நிலத்துக்கும் பெருமை.உலக மானுட இனத்துக்கு தமிழ்நிலம் வழங்கும் மாபெரும் கொடை என்றே இதனை நாம் கம்பீரமாகச் சொல்லலாம். இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது என்றார்.