இந்தியாவின் முன்னேற்றத்தை அதிகரிக்க கிராமங்கள், பஞ்சாயத்துக்களின் அதிகாரம் அவசியம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தல்

2 months ago 9

சில்வாசா: தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள சில்வாசா மற்றும் டாமன் மற்றும் டையூவில் ஜண்டா சவுக்கில் அரசு பள்ளியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த கூட்டத்தில் உரையாற்றி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, நமது அரசியலமைப்பின் முன்னுரையின்படி சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை வழங்குவதே நமது தேசத்தின் நோக்கமாகும். யூனியன் பிரதேச நிர்வாகம் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த முயற்சிகளின் பலன்கள் இப்போது கிடைக்கிறது. 70 முதல் 80 சதவீத மக்கள் கிராமங்களில் வசிப்பதால் இந்தியா கிராமங்களின் நாடாகும். எனவே கிராமங்கள் மற்றும் பஞ்சாயத்துக்கள் வலுப்பெற்றால் நமது நாடும் முன்னேறி வலிமையடையும் என்றார்.

The post இந்தியாவின் முன்னேற்றத்தை அதிகரிக்க கிராமங்கள், பஞ்சாயத்துக்களின் அதிகாரம் அவசியம்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article