இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து பூடான் பாராட்டு

4 hours ago 2

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த சர்வதேச தேர்தல் கமிஷனர் மாநாட்டில் பூடான் நாட்டு தலைமை தேர்தல் கமிஷனர் தசோ சோனம் தோபே பங்கேற்றார். அதில் பேசிய அவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திறன்மிக்கதாக இருந்ததாக கூறினார்.இது தொடர்பாக அவர் கூறும்போது, 'இந்தியா வழங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பூடானில் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளன. இதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த எந்திரங்களை பயன்படுத்தியது முதல் தேர்தல்களில் அவற்றின் செயல் திறன் பாராட்டுக்குரியவையாக உள்ளன' என தெரிவித்தார்.

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான நம்பிக்கையை எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், பூடான் நாடு அவற்றின் சிறப்பை பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல நேபாளம், நமீபியா போன்ற நாடுகளுக்கும் இந்தியா மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வழங்கி உள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Read Entire Article