இந்தியாவின் பெருமைக்குரிய மகன் ரத்தன் டாடா: இஸ்ரேல் பிரதமர் இரங்கல்

3 months ago 18

புதுடெல்லி: இந்தியாவின் பெருமைக்குரிய மகன் ரத்தன் டாடா என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார். பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மரணம் குறித்து பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ரத்தன் டாடாவின் மறைவுக்காக தானும், இஸ்ரேல் மக்களும் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘இந்தியாவின் பெருமைக்குரிய மகன் ரத்தன் டாடா; இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்த அவர் கடுமையாக உழைத்துள்ளார்.

ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியும் ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியா-பிரான்ஸ் உறவுகளை மேம்படுத்துவதில் ரத்தன் டாடா பெரும் பங்கு வகித்த தொழிலதிபர் என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார். மேலும் உலகின் முன்னணி தொழிலதிபர்களும், ரத்தன் டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post இந்தியாவின் பெருமைக்குரிய மகன் ரத்தன் டாடா: இஸ்ரேல் பிரதமர் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article